உகாதி பண்டிகையின் சடங்குகளும் மரபுகளும்...!!!
டெக்கான் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாடும் வருட பிறப்பே உகாதியாகும்.
உகாதி என்பது 'யுகாதி' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது.
'யுக்' என்றால் வயது என்றும் 'ஆதி' என்றால் ஆரம்பம் என்றும் பொருள் தரும்.
உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்து புராணத்தின் படி, இந்த நாளில் தான் தன் படைத்தல் வேலையை தொடங்கினாராம் பிரம்ம தேவன்.
அதனால் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
உகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாக விளங்குகிறது.
இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும்.
மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும்.
பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும்.
சுத்தப்படுத்துவதை தவிர வேறு சில சடங்குகளும், மரபுகளும் இருக்கின்றன. அதனைப் பற்றி பார்க்கலாமா?
உகாதி தினத்தன்று, உகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் -
இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு.
இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் - வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும், மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும், கடைசியாக மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும்.
சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.
பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள்.
அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள்.
சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள்.
அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.
வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது.
ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.
உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும்.
இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும்.
மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க உணவுகளை பரிமாறுவதும் வழக்கம்
No comments:
Post a Comment