Showing posts with label WhatsApp Tamil. Show all posts
Showing posts with label WhatsApp Tamil. Show all posts

Thursday, 11 January 2018

கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது


பலரும் அறிந்திராத அறிவியல் ரகசியம்


கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா?


நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர்.






பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம்.

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் பொருட்டும், அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைப்போம்.


ஆனால், திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுடு வில் பொட்டு வைப்பார்கள். அது ஏன் தெரியுமா?


நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரபிகள் தூண்டப்படுகிறது.


நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது.


திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு செக்ஸ் உறவில் நல்ல ஆர்வமும், கர்ப்பபை வலுவும் பெறவேண்டும் என்பதற்காக தான், நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள்.


இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.


கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டபடாமல் இருப்பதற்காக, அவர்களின் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.


ஆனால், பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர்.


இரு புருவ மத்தியில், ஆண் பெண் அனைவரும், எல்லா நாளிலும் போட்டு வைக்கலாம்.

கெர்போட்ட_நிவர்த்தி



கெர்போட்ட_நிவர்த்தி என்றால் என்ன?


தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டுள்ளனர்.


தினசரி காலண்டரில் " இன்று " கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?


நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,


சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.


இது எதும் விஷேச தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை.










அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.


நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது.


இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.


அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்


சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது.


இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்.


இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.


அதாவது,


மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்.


இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.


அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்


ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்.


இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது.


ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??


எனவே,


மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.


இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.


எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்.


எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்.


இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.


இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்


நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்


கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.


ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள

வானிலை_அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்.


புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!


ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாளு

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் மின்நூல்கள


List of Legends Life History Books


தந்தை பெரியார்

https://t.co/q2VexzfDTP



கார்ல் மார்க்ஸ்

https://t.co/BbQwjgJFcq



சேகுவேரா

https://t.co/JI9eSrEDUE



தாமஸ் ஆல்வா எடிசன்

https://t.co/a6InSC0Da1



ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

https://t.co/IWWUTSWna5



பிரபாகரன்

https://t.co/Zg5mtFiFE8



மாவீரன் அலெக்சாண்டர்

https://t.co/A2abcypbAv



மருதநாயகம்

https://t.co/gpeSWfN4R6



ராமானுஜம்

https://t.co/HgR7VZeYGI



சுனிதா வில்லியம்ஸ்

https://t.co/jkSAD1kMEL



ஹெலன் கெல்லர்

https://t.co/Jjw8SYd5XH



அறிஞர் அண்ணா

https://t.co/hanYh3Y2cS



திப்பு சுல்தான்

https://t.co/hMPzLcS68j



நெப்போலியன்

https://t.co/2CeBxGohU3



கேனல் கடாபி

https://t.co/W6aukGy6rs



ஹிட்லர்

https://t.co/qHpoaN6Z0A



காமராசர்

https://t.co/Y7A7LCmo1o



பாரதியார்

https://t.co/lVAC1Skenq



பிடல் காஸ்ட்ரோ

https://t.co/2fAuV7G33K


Friday, 5 January 2018

கௌரவர்கள் நூறு பேர்



கௌரவர்கள்




பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் :

1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai

எளிதில் கிடைக்காத அற்புதம்......👍

Friday, 5 May 2017

மகிழ்ந்திரு


மகிழ்ச்சியாக இருக்க

மனம் ஒரு நாளில் எவ்வளவு  நிமிடம், எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இதுவே மனித சக்தி. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும் வீரியத்துடன் வேலை செய்யும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ஆரோக்கியமாக இருக்க முடியும்.




மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!


உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது,  ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசியுங்கள்   உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்


ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 3.அக்கறையை  வளர்த்துக்கொள்ளுங்கள்!


 நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

4. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!


 “வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 5. தடை..அதை உடை.!


 எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 6.நினைத்தை முடிக்கவும்!


 நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!


 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

8.அடிக்கடி சிரியுங்கள்!


அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!


கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

10.நன்றி சொல்வது, நன்று!


 உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!


வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்
.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 12.கொள்கையில் உறுதி வேண்டும்


நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

13.தியானம் நல்லது!


 ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 14.செய்வதை திருந்தச்செய் !


நீங்கள் எந்த வேலை  வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

 ➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 15. நம்பிக்கை..அதானே எல்லாம்!

வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை.  இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 16. ஆதலால் அதிகம் காதல் செய்!


 நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 17.முயற்சியை கைவிடாதீர்கள்!

 உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

18.உங்களது சிறப்பைக்கொடுங்கள்!


 ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 19.நமக்கு நாமே நல்லது!

 உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.

➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖

 20. நன்மையே செய்வோம்!


 எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் !மகிழ்ந்திரு


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற


செய்யாமை செய்யாமை நன்று

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : 

அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: 

சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: 

சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்:

முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: 

சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில்  நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: 

நில், யார் அங்கே?

திருடன்: 

ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: 

அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: 

மிக நல்லது. வா போவோம் என்றான்.

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: 

இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா:

அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: 

நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா:

ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: 

மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.

அவர்  கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.


ராஜா: 

அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: 

மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: 

போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: 

ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா:

நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: 

நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா:

உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்:

மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: 

நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: 

யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: 

புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: 

சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

-சுபம்-

Saturday, 22 April 2017

உறவுகள் தொடர்கதை


உறவுகள் பேணுங்கள் :-


 மிக மிக  அருமையான  கருத்து. வாட்ஸ்அப்பில்  வந்தது. இதன் அருமையை வாழ்க்கையில்  உணர்ந்தவன்  நான். கொஞ்சம்  நேரம்  ஒதுக்கி  அனைவரும்  அவசியம்  படிக்கவும்.
படிக்க  படிக்க கண்களில் நீர் வழிந்தது.  "நான் இருக்கின்றேன் பயப்படாதே  என ஆறுதல், தைரியம் கூறும் உறவுகள் ,
அவர்களின் அன்பு ஆதரவு, அவர்கள் காட்டும் பாசம்,அவர்களின் அருமையை தினம் தினம் அனுபவிக்கின்றேன்.  இன்னும்  பற்பல..............
-----------------------------------------------------------





உறவுகள்,,, தொடர்கதை!!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.

 சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ' என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!


Tuesday, 11 April 2017

விவசாயத்தை நேசித்தால்


விவசாயம் மண்ணோடு போகிறது


இத 2 நிமிஷம் ஒதுக்கி படிங்க,படிச்சு முடிச்ச பிறகு இதுல நியாயமிருக்குண்ணண Share pannunga




கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது

# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...

#சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

#ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

#சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

#இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

#சாப்பாட்டுக்கு எங்க போவாங்க?

#இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..

# நிறைய ஷேர் ஆச்சுன்னா வாட்சப்பில் இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.

#குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.

#நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்

#விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

#கொஞ்சம் வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.

#நாமல்லாம் இவ்வளவு நாள் வாட்சப், பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?

#இத ஷேர் பண்ணினா நல்லது

#இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது

#கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..

#Pls share it...
🌾
🌾
🌾
🌾
🌾
🌾
🌾
🌾
🌾

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _

-உண்மை இன்று புரியாது.

விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......🌿
🌾
🍀
🌾
🌾
🏃🏇

ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் நாம்  அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்தோ அதன் சார்பு தொழிலிலிருந்தோ வந்திருப்போம்.


Wednesday, 5 April 2017

விவசாயம்_அழிந்தால்


விவசாயம்_அழியும் உலகமே_அழியும் 



👉அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது..

❗அதுக்கு என்னல தம்பி?

👉அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே,

❗மொதல்ல ஒன்னோட ஆசையச்சொ ல்லுடே..

👉அண்ணே டாக்டருக்கு படிக்கவா?

❗டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான்கொ டுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

👉அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?

❗இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே..

👉அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,

❗ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..

👉அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?ஏதுக்கு?

❗மலேசியா பிளேன பாத்தல்ல..

👉அப்போ மரைன் ஓகேவா?

❗வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..

👉பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே?

❗அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

👉போலீசு வேலைக்காவது ட்ரை பன்னவாணே?

❗லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

👉அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே?

❗சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..

👉கேட்ரிங் ஓகேவா?

❗சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்மு டிஞ்சதும் நீயே கத்துப்ப , வேஸ்ட்ல..

👉ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்ப ன்னட்டுமா?

❗ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல ..

👉டீக்கடைய போடட்டுமா?

❗பிரதமர் ஆகி நாடு நாடா சுத்திகிட்டும், முதல்வர் போல டம்மியா இருக்கலாம்னு பாக்க,

"தூக்கி அடிச்சிருவேன்பா த்துக்கோ"..

👉வெளிநாட்டுக்கு போய்ச ம்பாதிக்கட்டுமா?

❗அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல..

👉👉👉 அப்போ நான் என்னதான் பன்ன?

❗❗❗அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள்.

👉ஏன்ணே இப்புடி சொல்ற?

❗ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

👉👉அப்புடி சொல்லாதணே நான்👍 இருக்கேன்,

❗அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான்

உதவி பன்றேன்டா..

# விவசாயி_அழிந்தால் ?
# விவசாயம்_அழியும் ,
# விவசாயம்_அழிந்தால் ?
# உலகமே_அழியும் .
🌾🌾🌾🌾🌾
உங்க நண்பன்.


உகாதி சடங்குகளும மரபுகளும்



உகாதி பண்டிகையின் சடங்குகளும்  மரபுகளும்...!!!





டெக்கான் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாடும் வருட பிறப்பே உகாதியாகும்.

உகாதி என்பது 'யுகாதி' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது.

'யுக்' என்றால் வயது என்றும் 'ஆதி' என்றால் ஆரம்பம் என்றும் பொருள் தரும்.

உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்து புராணத்தின் படி, இந்த நாளில் தான் தன் படைத்தல் வேலையை தொடங்கினாராம் பிரம்ம தேவன்.
அதனால் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

உகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாக விளங்குகிறது.

இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும்.

மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும்.

பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும்.


சுத்தப்படுத்துவதை தவிர வேறு சில சடங்குகளும், மரபுகளும் இருக்கின்றன. அதனைப் பற்றி பார்க்கலாமா?

உகாதி தினத்தன்று, உகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் -

இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு.
இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் - வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும், மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும், கடைசியாக மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும்.

சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள்.

அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள்.

சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள்.

அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.

வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும்.

இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும்.

மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க உணவுகளை பரிமாறுவதும் வழக்கம்


வாழ்க்கையின் உண்மை


நான்கு மனைவிகள்


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.




ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.


ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.

ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.

அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’

நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.


Tuesday, 4 April 2017

பெண்களை மதிப்போம்


பெண்களே  ஜாக்கிரதையாய் இருங்கள்:-



பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!





சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.
போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை!
ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!

அவரது இரத்தத்தில் Rohypnol. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!

இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது!

இந்த Rohypnol. உண்மையில் தூக்கத்திற்கான  ஒரு சிறிய மாத்திரை.
இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது!

இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது!

அதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத்  தடுக்கிறது!
எனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் 'paternity test ' மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது!

இந்த மாத்திரையினால்   இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன!

இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.
Rohypnol
எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது! தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ  இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை!

அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை!

அதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும்  அவர்களது  நினைவில் இருப்பதில்லை!

கயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளது எளிதாகக் கிடைக்கக்கூடியது!

இன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.

பெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்!
 பாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்!

கேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி  செய்யுங்கள்!

வேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.

வேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம்.

ஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்!

முடிந்தவரை பகிருங்கள்!

எங்கோ ஒரு அக்கா , தங்கை அல்லது ஒரு மகள் இந்த தகவலைப் பகிர்வதால் உங்களால் காப்பாற்றப்படலாம் என்பதை உணர்ந்து வேகமாகப் பகிருங்கள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ஆயுதம்.அதுவே பெண்களைப் பாதுகாக்கும்!

பெண்களை மதிப்போம்

மனதைத் தொட்ட வரிகள்






1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!

2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!

3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!

 4.அதிர்ஷ்டத்திற்காக  காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.

5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!

6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!

 7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!

8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !

9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !

10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.

11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !

15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !

16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !

17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !


Sunday, 2 April 2017

கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி


 அமைதியாய் ஒரு புரட்சி

👁👁😳👁👁அருமையான 👁தகவல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள். 👁👁👁👁👁👁👁👁    

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி
👁👁👁👁👁👁👁

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.





ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
 use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
 PONDICHERRY

PHONE: 0413-2233659
 EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள்.👍👌🙏👁👁👁👁👁👁👁👲🎅👷👮👲👳
Forward from another Whatsapp group


Friday, 31 March 2017

வியர்வை படிந்த தலையணை



படித்ததில் பிடித்தது
--------------------------------------

வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன். ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பக்கத்து வீட்டிற்கு ஏதோ ஒரு சாக்கு சொல்லிச்சென்று அதைக்கேட்டு வாங்கிக் குடித்து தாகசாந்தி அடைந்ததுண்டு. இப்போது என் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை அதில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து பொறாமைப்பட்டு வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை. அலுவலகம் மற்றும்  வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி.

சோஃபாவும் அப்படித்தான். அதிக நேரம் அமர்ந்துவிட்டால் 'ரொம்பவும் சோம்பேறியாய் ஆகிவிட்டோமோ! அளவுக்கதிகமாக உடம்பு சுகத்துக்கு பழகிவிட்டோமோ!' என்பது மாதிரியாய் குற்ற உணர்ச்சி தோன்றும். அதுமட்டுமில்லாமல் அமர்ந்தால் பாதி புட்டம் உள்ளேபோய் என்னமோ அசௌகரியமாக உணர்வேன். உடனே பக்கத்தில் இருக்கும் ப்ளாஸ்டிக் சேரில் வசதியாக அமர்ந்து கொள்வதுண்டு.

பீட்ஸா பர்கர் பாஸ்தா என்றெல்லாம் விதவிதமாய் சாப்பிட்டு ருசிபார்த்துவிட்டு 'என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

3GB RAM, quardcore processor, 32GB in build memory என்று அனைத்துமே போதுமான அளவு இருக்கிறதா, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா, மார்க்கெட்டில் ட்ரெண்டில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் hardly I use Facebook and WhatsApp. அதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன்.

அடுத்ததாக எல்ஈடி டிவி. அம்பது இன்ச் இருக்கிறதா, அத்தனை வண்ணங்களையும் தெளிவாக உள்வாங்கிக் காட்டுகிறதா, 1080p or 4K compatibility இருக்கிறதா, WiFi enabledஆ, inbuild internet இருக்கிறதா, மொபைலையோ ஐபேடையோ mirroring செய்ய முடிகிறதா, 1 TB hard diskஐ கனெக்ட் செய்தால் ஏற்றுக்கொள்கிறதா, Miracast, YouTube, Netflix, Browser எல்லாம் உள்ளடக்கியதா, இதுதான் லேட்டஸ்ட் மாடலா என்றெல்லாம் ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு அரை மனதுடன் வாங்கியாயிற்று. ஆனால் அதை வாங்கி அரை வருடங்கழித்து இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் டிவி பார்த்தால் பெரிய விஷயம்.

ஒரு காலத்தில் வெளியே எங்கு போனாலும் ஓசி வைஃபை கிடைக்காதா எதையாவது டவுன்லோட் செய்துவிடமாட்டோமா என்று தவம் கிடந்திருக்கிறேன். ஆனால் இப்போது வீட்டிலேயே ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு சந்தா செலுத்தியாகிவிட்டது. மாதம் 50GB வரை தரவேற்றம் தரவிறக்கம் செய்யமுடியும். ஆனால் Work from Home தவிர வேறு எதற்கும் பெரிதாக அதைப் பயன்படுத்துவதில்லை. அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

வேலை நிமித்தமாய் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க நேரும்போதெல்லாம் அங்கிருக்கும் பஞ்சுமெத்தையிலிருந்து பாத் டப் பிரமிப்பு அகலாமல் அனுபவிக்கும்போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரமோ பத்து நாளோ தங்கி முடித்து வெளியே கிளம்பும்போதுதான் செயற்கையாய் சிரித்து வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட், உதட்டில் வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு உதவிய பணியாளர்கள் என்று இது எல்லாமே மாயை, சம்பளத்திற்காக அவரவர் நிர்பந்தத்தின் பேரில் நமக்கு காட்டிய அனுசரனை, இது ஒரு பிளாஸ்டிக் வாழ்க்கை என்று உணர முடிகிறது. வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனது வியர்வையை கண்ணீரை ஏந்திக்கொண்டு எனக்காகக் காத்திருக்கும் ஒற்றைத் தலையனையை கண்கள் தேடும்.

இப்படியாக பல சுய பரிசோதனைகளின்  வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. நாம் நமக்கு பண வரவு அதிகமாகத் தொடங்கியவுடன் சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த நெருக்கமான வாழ்வைத்தான்!

அதே யோசனையோடு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே நடந்து கொண்டிருந்தவர்களில் இருவரைக் கூப்பிட்டு கீழ்க்கண்டவாறு சொல்லத் தோன்றியது.

'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சந்தோஷங்கறது காசு பணத்தால மட்டும் வந்துடறது இல்லைங்க!' :)

படித்ததில் பிடித்தது.

Wednesday, 29 March 2017

⛳பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்



1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு

பழநிமலை முருனுக்கு அரோகரா...
🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏

Sunday, 26 March 2017

மனதைக் கவர்ந்த நல்ல பதிவு



☄🌹குட்டி குட்டி விஷயங்கள்தொட்டு மனதோடு விளையாடும்🎯


🌟*சில அருமையான விஷயங்கள்*💫

🌴வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...."
வெட்டுங்கள் - மழை நீரை சேமிப்பேன் என்கிறது "குளம்..........."🌾

💻ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..🌾

🥘தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.🌾

📚கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன.!🌾

🤡நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..🌾

🐕🐂பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!🌾

😔காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். 🤣காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.🌾

📝🖍திருக்குறளை... வாழறதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!🌾

🎖🥇அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு
பல தோல்விகளும்,
சில துரோகிகளும் தேவை!!🌾

💰 Money மட்டுமே மதிக்கப்படுகிறது... மனிதம்பலரால் மிதிக்கப்படுகிறது..🌾

🤦🏼‍♂🤦‍♀நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!🌾

🎬🎼எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!🌾

😥⏱எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.🌾

📺🏏கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!🌾

🎈👨‍👩‍👧‍👦பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!🌾

🌳💸⛏ பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்... 🌾

🕴🏆நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!🌾

🚍லாரியில அழுது கொண்டே சென்றது..... ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்.......!!!🌾

🌾👉 நல்லா இருந்தா அனைவருக்கும் பகிருங்களேன்... 👍         💐மனதைக் கவர்ந்த நல்ல பதிவு💐மாற்றம் ஒன்றே மாறாதவை


பிறந்த வீடு பெண்களின் நிலை



பெண்களின் நிலை :-


எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்..!! அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கை.. புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. "என்னாச்சுக்கா..?" என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத..!!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. "என்னாச்சுடி என் ராசாத்தி..??" பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்..!!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மச்சான் உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு.. அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!!

நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான் பெண்ணின் திருமணம்..!!

நேசியுங்கள்..!! பெண்களை..!!
காதலியுங்கள்..!! உங்கள் மனைவியை..
இத்தனை பயத்துடனும் பாச பிரிவுடனும்
பெற்றதந்தையையும்தாயையும் உடன்பிரந்தார்களின் உறவையும் பிரிந்து
செல்லும் அந்த பெண்னின் இல்வைழ்க்கை
இனிதாக இருப்பது எத்தனைபேருக்கு.?


பணமில்லா பரிமாற்றம்

வணக்கம் திரு. மோடி அவர்களுக்கு.

நாண் சராசரி மனிதன். என்னை போன்ற பலரின் கேள்வி இது தான். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்க்கு பதில் தாருங்கள்.இந்த நாட்டின் மீது எங்களுக்கும் அக்கரை இருக்கு.

 Cashless_Transaction! பணமில்லா பரிமாற்றம்!

உங்கள் பரபரப்பான அலுவல்களுக்கு இடையிலும் நீங்கள் FM radio கேட்பவராக இருந்தால் மேலே சொன்ன "இந்திய அரசுக்காக" என சொல்லப்படும் விளம்பர வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள். E-wallet எனப்படும் "மின்னணு பர்ஸ்" மூலம் உங்கள் transaction அமைவதால்... அரசாங்கத்துக்கு வரி வருவாய் கூடும் எனவும், இதற்காக "Mobile App"-களை டவுன்லோடு செய்யச் சொல்லியும், நம்மீது அறிவுஜீவி-களால் மூளைச்சலவை செய்யப்படுகிறது.

இதன் செயல்பாடு&சேவை எப்படி? பார்ப்போம்!

¶ SBI - மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 3% சேவைத் தொகை மற்றும் அதற்கான service tax..
¶ paytm மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் உறுப்பினர் அல்லாதோருக்கு 4% சேவைத் தொகையும் உறுப்பினர்களுக்கு 1% சேவைத் தொகையும்..
¶ Jio money மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 2.5% சேவைத் தொகை..
¶ ICICI, Axis, Mobikwik & Freecharge போன்றவை இன்னும் சேவைத் தொகை நிர்ணயம் செய்யவில்லை. (போதுமான மீன்கள் வலையில் விழுந்த பிறகு செய்வார்கள்)

இதனை யாராவது வெளிப்படையாக சொல்கிறார்களா? இதில் நமக்கென்ன பிரச்சினை? அதையும் பார்ப்போம்.

ஒரு நூறு ரூபாய் நோட்டு பல்வேறு காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கை மாறுகிறது என கொண்டால், அது எத்தனை ஆயிரம் பேர் கையை சென்றடைந்திருந்தாலும் அது ஒரு 100-ரூபாய்க்கான பரிமாற்றம். அவ்வளவே!
••• ••• •••
இப்போது இதனையே நாம் Reliance-ன் "Jiomoney" e-wallet மூலமாக மேற்கொள்வதாக எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நாம் 2.5% சேவைத்தொகை செலுத்த வேண்டும். அதாவது, 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூபாய் 2.50  சேவைத்தொகை ஆகும். இந்த நூறு ரூபாய் ஒரு ஆயிரம் பேரிடம் கைமாறியதாக எடுத்துக்கொண்டால், reliance-ற்கு (2.5x1000=2500) 2500 ரூபாய் கிடைக்கும். உட்கார்ந்த இடத்தில் வெறும் ஒரு நூறு ரூபாய்க்கே இவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்றால்...
"நோகாம நுங்கெடுக்கிறது" ஞாபகம் வருதா..?

யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? "மோடி" அவர்களின் திட்டம் யாருக்கு சாதகமானது? அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் விளக்குவார்களா?

நன்றி*

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்ற! சரி கட்டிட்டேன்.  மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குற. நகை வாங்க போறேன் அங்கேயும் வரி. சாப்பிட போறேன் அங்கேயும் வரி. மக்களை சாகடிச்சி புடுங்குற.  கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குற அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிற...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்ப?                    கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவே?!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்ப.

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்த?

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்று. எல்லா சிஸ்டத்தை மாற்று. சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து.                      இவண்....                                     இந்திய தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த        🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்தியர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳    *இதை அதிகம் பகிரவும்***

அத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமே..


இது PWD துறையில் உள்ள நண்பர் அனுப்பியது      👉🏼தயவு செய்து அனைவரும் படிக்கவும் பகிரவும்...

அத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமே....

கேரள அரசின் அட்டப்பாடி அணைக்கு நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்...
பாவனிஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் அணைக்கும் நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்....

போராட்டம் தேவையில்லை

நீலகிரியில் உற்பத்தியாகும் முக்கிய ஊற்றுகள் அல்லது ஏரிகள்....

1.PYKARA LAKE
2.MUKUTRHY LAKE
3.PORTHYMUND LAKE
4.PARSANS VALLEY LAKE
5.SANDYNULLA LAKE
6.AVALANCHI LAKE
7.EMARALD LAKE
8.UPPER BHAVANI
9..KUNDHA DAM

இதில் PYKARA LAKE ல் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள் ஒன்றினைந்தே கர்நாடக மாநிலத்திற்குள் சென்று MOYAR RIVER என்ற பெயரில் ஒடுகின்றது பின்பு மீண்டும் தமிழக எல்லையில் பவானி சாகர் அணையை வந்தடைகிறது....

MUKUTRHY LAKE.PORTHYMUND LAKE.AVALANCHI LAKE இதிலிருந்து வெளியேரும் நீர் கேரள எல்லைக்குள் செல்கிறது.
UPPER BHAVANI இதிலிருந்து வெளிவரும் நீரே கேரள எல்லைக்குள் சென்று மீண்டும் அட்டபாடி வழியாக அத்திக்கடவை வந்தடைகிறது... சிறுவானி நீரும் UPPER BHAVANI நீரும் அட்டப்பாடி அருகே ஒன்றினைகின்றன. அட்ப்பாடியில் அணைகட்டுவதே கேரள அரசின் திட்டம்...

முதலில் நான் குறிப்பிட்ட 9 நீர் இருப்புகளில் UPPER BHAVANI ஐ தவிர மற்ற 8 நீர் இருப்புகளுக்கும் தொடர்பு உண்டு ஒன்றுக்கொன்று இணைந்தே காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றினைத்து KUNDHA DAM க்கு கொண்டு வர முடியும்....KUNDHA DAM ல் இருந்து ஏற்கனவே அத்திக்கடவிற்கு நீர் வரத்து உள்ளது.....

இவ்வாறு செய்வதன் மூலம் கேராளா மற்றும் கர்நாடகா செல்லும் நீரை தவிர்க்கலாம்.பைக்காரா நீர் கூடலூர் வழியாக செல்லவில்லை என்றால் பாவானி சாகர் அணைக்கு நீர்வரத்து எப்படி என்ற ஐயம் ஏற்படலாம் .... KUNDHA DAM வழியாக வரும் நீர் அத்திக்கடவு பில்லூர் டேம் வந்தைடைகிறது... இதிலிருந்து வெளிவரும் நீர் மேட்டுப்பாளையம் வழியாக பாவானி சாகர் அணையை வந்தடையும்.நீலகிரியில் உள்ள UPPER BHAVANI ஐத் தவிர மற்ற 8நீர் இருப்புகளையும் ஒன்றினைத்தாலே போதும் நீர் வழித் தடங்களை பெரிதாக்க வேண்டும்.... PYKARA DAM மற்றும் KUNDHA DAM ன் அளவை பெரிதாக்கி வழு சேர்க்க வேண்டும். சாத்தியமே..கேரளாவிற்கோ கார்நாடகாவிற்கோ செல்லும் நீரின் குறுக்கே நாம் அணைகட்ட தேவையில்லை..கடைசியாக நான் விட்டு வைத்தது UPPER BHAVANI இதிலிருந்தும் KUNDHA DAM நீர் கொண்டுவர முடியும் சற்று கடினமான ஒன்று பழைய வழித்தடங்கல் இல்லை... எதிலும் தொடர்பில்லாமல் தனித்தே உள்ளது . ஆனால் உருவாக்க முடியும் இந்த நீரை KUNDHA DAM உடன் இணைத்தால் கேரள அரசு அட்டப்பாடி அணைக்கு நீர் வரத்து குறையும் .பலஆண்டுகள் ஆகாது....  நாம் நினைத்தாள் ஒருசில ஆண்டுகளே. உண்மையில் சாத்தியமே.பகிருங்கள் நண்பர்களே...தமிழக தன்னாறுவ சேவை உள்ளங்கள். . அரசு அதிகாரிகள்  அனைவரும் சேர்ந்து நம் அரசுக்கு எடுத்துக் கூறுவேம் தமிழ் நாட்டை காக்க தமிழர்களாகியநாம்👈🏻தயவு செய்து நண்பர்களுக்கு அனுப்பவும்👨‍👨‍👧‍👧