Thursday 11 January 2018

கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது


பலரும் அறிந்திராத அறிவியல் ரகசியம்


கணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா?


நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர்.






பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம்.

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் பொருட்டும், அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைப்போம்.


ஆனால், திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு நெற்றி வகுடு வில் பொட்டு வைப்பார்கள். அது ஏன் தெரியுமா?


நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரபிகள் தூண்டப்படுகிறது.


நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது.


திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு செக்ஸ் உறவில் நல்ல ஆர்வமும், கர்ப்பபை வலுவும் பெறவேண்டும் என்பதற்காக தான், நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள்.


இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.


கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டபடாமல் இருப்பதற்காக, அவர்களின் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.


ஆனால், பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர்.


இரு புருவ மத்தியில், ஆண் பெண் அனைவரும், எல்லா நாளிலும் போட்டு வைக்கலாம்.

No comments:

Post a Comment