பாயின் மருத்துவ குணங்கள்
இயற்கை மறந்தோம் இன்னல் படுகிறோம் நினைவில் வைப்போம் முயற்சியும் செய்வோம்.....
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும். பாய்களில் இருக்கு பல்வேறு இயற்கை மருத்துவ குணங்கள் அறிவோம்...
பெரும்பாலான வீடுகளில் நாம் தரையில் விரிப்பதற்கு நெகிழிப் பாய்(பிளாஸ்டிக்)கலேயே பயன்படுத்துகிறோம். இப்போது ஆதிக்கம் செலுத்திவரும் நெகிழிப் பாய்களை, குளிர் காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் எவ்வித மருத்துவக் குணங்களும் இல்லை.வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதித்து பல்வேறு தீமைகளை நமது உடலுக்கு இழைக்கின்றன.
தாவரங்களில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித மருத்துவ குணங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.
ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் :
கோரைப்பாய்
கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.
கம்பளி விரிப்பு
கம்பளி விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.
பிரப்பம்பாய்
பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும்.
ஈச்சம்பாய்
ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.ஆனால் உடலில் சூட்டை ஏற்படுத்தி, கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.
மூங்கில்பாய்
மூங்கில்பாய் என்பது மூங்கில் கழிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம் தடுக்கை போன்ற பாயை தயார் செய்வது ஆகும். இதில் படுத்தால், உடல் சூடும் பித்தமும் அதிகாரிக்கும். அதனால் பெரும்பாலும் மறைப்பாக தொங்கவிடும் இடத்திற்கு இதை பயன்படுத்துவார்கள்.ww
தாழம்பாய்
தாழம்பாயில் படுத்துறங்கினால் வாந்தி, தலை சுற்றல், அனைத்து வகை பித்தமும் படிப்படியாக போகும்.
பனையோலை பாய்
பனையோலை பாயில் படுப்பது, பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி சுகத்தை தரும்.
தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.
ரத்தினக் கம்பளமானது, ஆபத்தான கிருமிகளால் எற்படும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது
No comments:
Post a Comment