Thursday, 2 March 2017

அடுத்தவருக்கு முடிந்தவரை உதவிடுங்கள்


ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.

எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...

#நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

அடுத்தவருக்கு முடிந்தவரை உதவிடுங்கள்

Good Day.💐💐💐💐💐


சிவனின் திருஉருவங்கள்

🌹 🌿 சிவனின் திருஉருவங்கள்🌹🌿
~~~~~~~~~~~~~~~~~~~~

சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.

1. சத்யோ ஜாதம் :
      படைத்தல்

2. வாமதேவம்:
      காத்தல்

3. அகோரம் :
     அழித்தல்

4. தற்புருடம் :
      மறைத்தல்

5. ஈசானம்:
     அருளல்


சிவனின் அடையாளங்கள்🌹🌿

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.🌿🌹

1) 🌹 நெற்றிக்கண் காணப்படல்.
2) 🌿 கழுத்து நீலநிறமாக காணப்படல்.
3) 🌹 சடைமுடியில் பிறைநிலாவைக்                     கொண்டிருத்தல்.
4) 🌿 நீண்ட சுருண்ட சடாமுடி
5) 🌹 தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
6) 🌿 உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
7) 🌹 புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
8) 🌿 கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
9) 🌹 கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
10) 🌿 நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
11) 🌹 இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
12) 🌿 சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்

சிவனின் திருஉருவங்கள்🌹🌿🌹

சிவபெருமானின் திருஉருவங்கள் என கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.🌹🌿

1) 🌹 சந்திரசேகரர்.

2) 🌿 உமாமகேஸ்வரர்.

3)🌹ரிஷபாரூடர்.

4) 🌿நடராஜர்.

5) 🌹கல்யாணசுந்தரர்.

6) 🌿பிட்சாடனர்.

7)🌹 காமதகனார்.

8) 🌿 காலசம்ஹாரமூர்த்தி.

9) 🌹 திரிபுராந்தகர்.

10) 🌿 சலந்தரர்.

11) 🌹 கஜாசுர சம்ஹாரர்.

12) 🌿 தக்க்ஷ யக்ஞவதர்.

13) 🌹 ஹரியர்த்தர்.

14) 🌿 அர்த்தநாரீசுவரர்.

15) 🌹 கிராதகர்.

16) 🌿 கங்காளர்.

17) 🌹 சண்டேச அநுக்கிரஹர்.

18)  🌿 நீலகணடர்.

19) 🌹 சக்ரப்ரதர்.

20) 🌿 விக்னப்ரசாதர்.

21) 🌹 சோமாஸ்கந்தர்.

22)  🌿 ஏகபாதர்.

23) 🌹 சுகாசனர்.

24) 🌿 தட்சிணாமூர்த்தி.

25) 🌹 லிங்கோத்பவர்.

26) 🌿 ரிஷபாந்திகர்.

27) 🌹அகோரவீரபத்ரர்.

28) 🌿அகோராஸ்ரமூர்த்தி.

29) 🌹சக்ரதானஸ்வரூபர்.

30) 🌿 சிவலிங்கம்.

31) 🌹முகலிங்கேஸ்வரர்.

32) 🌿 சர்வஸம்ஹாரர்.

33) 🌹ஏகபாத திரிமூர்த்தி.

34) 🌿 திரிபாதமூர்த்தி.

35) 🌹ஜ்வரஹரேஸ்வரர்.

36) 🌿ஊர்த்துவதாண்டவர்.

37)🌹வராக் ஸம்காரி .

38)🌿கூர்மஸம்ஹாரி.

39)🌹மச்சஸம்ஹாரி.

40)🌿சரபேசர்.

41)🌹பைரவர்.

42) 🌿சார்த்துலஹரி.

43) 🌹லகுளீசர்.

44) 🌿சதாசிவர்.

45) 🌹 உமேசர்.

46) 🌿புஜங்கலளிதர்.

47) 🌹 புஜங்கத்ராசர்.

48) 🌿கங்காதரர்.

49) 🌹 கங்காவிசர்ஜனர்.

50) 🌿யக்ஞேஸ்வரர்.

51) 🌹 உக்ரர்.

52) 🌿ஆபதோத்தாரணார்.

53) 🌹 ஷேத்ரபாலர்.

54) 🌿கஜாந்திகர்.

55) 🌹 அச்வாரூடர்.

56) 🌿கௌரீவரப்ரதர்.

57)🌹கௌரீலீலா சமன்விதர்.

58) 🌿கருடாந்திகர்.

59) 🌹பிரம்ம சிரச்சேதர்.

60) 🌿ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.

61) 🌹 சிஷ்யபாலர்.

62) 🌿ஹரிவிரிஞ்சதாரணர்.

63) 🌹 சந்தியா நிருத்தர்.

எனக்கு பிடித்த அருமையான கதை...💐



கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.

அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.

அருகிலுள்ள தீவில் அவன்
கரையேறுகிறான்.

“இறைவா… இங்கிருந்து
எப்படியாவது என்னை தப்பிக்க
வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த
தீவில் எத்தனை நாள் நான்
இருப்பது?

என் மனைவி மக்களை
பார்க்கவேண்டாமா??”
என்று
பிரார்த்திக்கிறேன்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு
உதவிக்கரம் நீளும் என்று
தினசரி எதிர்பார்த்து
எதிர்பார்த்து
ஏமாந்துவிடுகிறான். எதுவும்
உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள,
தீவில் கிடைத்த பொருட்கள்,
மற்றும் கப்பலின் உடைந்த
பாகங்கள் இவற்றை கொண்டு
ஒரு சிறிய குடிசை ஒன்றை
கட்டுகிறான்.

அதில் கரை
ஒதுங்கிய கப்பலில் இருந்த
தனது பொருட்கள் மற்றும்
உடமைகள் சிலவற்றை மட்டும்
பத்திரப்படுத்தி, தானும் தங்கி
வந்தான்..

இப்படியே சில நாட்கள்
ஓடுகின்றன.

இவன்
பிரார்த்தனையை மட்டும்
விடவில்லை.

கடவுள் ஏதாவது
ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம்
உதவுவார் என்று தன்னை
தேற்றிக் கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு
தேடுவதற்காக வெளியே
சென்றுவிட்டு
திரும்புகையில், அவன் கண்ட
காட்சி அவனை திடுக்கிட
வைத்தது.

பட்ட காலிலே படும் என்பது
போல… எது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.

இவன்
தங்குவதுகென்று இருந்த ஒரே
குடிசையும் வானுயுற
எழும்பிய புகையுடன்
தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது.

குடிசைக்குள் இருந்த
உடைமைகள் அனைத்தும்
தீக்கிரையாகியிருந்தன.

அதை
பார்த்த இவன் அலறித்
துடித்தான். எல்லாம்
போய்விட்டது. இவனிடமிருந்த
மிச்ச சொச்ச பொருட்களும்
போய்விட்டது.

“இறைவா… என்னை
காப்பாற்றும்படி தானே
உன்னை மன்றாடினேன். நீ
என்னவென்றால்
இருப்பவற்றையும் பறித்துக்
கொண்டாயே… இது தான் உன்
நீதியோ…?” என்று கதறி
அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின்
சப்தம் இவனை எழுப்பியது.

இவன்
தீவை நோக்கி அது
வந்து கொண்டிருந்தது.

“அப்பாடா… நல்ல வேளை… ஒரு
வழியாக இங்கிருந்து
தப்பித்தோம்.
யாரோ நம்மை
காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளி
குதித்தான்.

கப்பல் சிப்பந்திகள் இவனை,
லைஃப் போட்டில் வந்து
அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில்
மாட்டிக்கொண்டிருப்பது
எப்படி தெரியும் என்று
அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை
எழும்பியதை பார்த்தோம்….

யாரோ தீவில் கரை ஒதுங்கி
காப்பாற்ற வேண்டி சிக்னல்
கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்” என்கிறார்கள்
அவர்கள்.

அப்போது இறைவன் குடிசையை
எரித்த காரணம் இவனுக்கு
புரிந்தது. இறைவனுக்கு நன்றி
சொன்னான்.

அந்த வழியில் கப்பல்கள் வருவதே
மிக மிக அரிதான நிலையில்,
குடிசை மட்டும் தீப்பிடித்து
எரியவில்லை என்றால் தன்
நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

அவசரப்பட்டு இறைவனை
நிந்தித்ததை நினைத்து
வெட்கினான்.

வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம்
இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக
எடைபோட்டுவிடுகிறோம்.

நம்மை காக்கவே அவன்
ஒவ்வொரு கணமும்
காத்திருக்கிறான். அவன் தரும்
சோதனைகள் அனைத்தும் நம்மை
வேறொரு மிகப் பெரிய
ஆபத்திலிருந்து காக்கவே
என்று நாம்
புரிந்துகொண்டால், எதைப்
பற்றியும்
அலட்டிகொள்ளவேண்டியதில்லை.

சோதனை
என்றால்… இறைவனின்
அருட்பார்வை உங்கள் மீது
விழுந்துவிட்டது விரைவில்
நல்லது நடக்கும் என்று
நம்புங்கள்...🙏💐


நற்பவி நற்பவி நற்பவி

சித்தர்கள் தபோவனம்


#பத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது.

1860 ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது.அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமிப் பிள்ளை அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரைப் பெரிதும் கவர்ந்தது.

பத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 1890-இல் தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைத் தோற்றுவித்தார். 1891-இல் பத்துமலையின் குகைக்கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியர் சிலையை நிலைநாட்டினார். 1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது.[5] இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் நவம்பர் 2001-இல் திறப்புவிழா கண்டது. இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்தச் சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. [6]இந்தச் சிலை ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[7]சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாகராஜன் மலேசியாவில் பல ஆலய நிர்மாணிப்புகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார். செபாராங் பிறை, தாசேக் குளுகோர், மாரியம்மன் ஆலயம், பத்துமலை மீனாட்சி அம்மன் சிலை, பத்துமலை ஆஞ்சநேயர் சிலை, கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் போன்றவை அவரின் கைவண்ணங்களே.

இந்தச் சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினையும் இந்தச் சிலை பெற்றுள்ளது. இந்த சிலையைக் காண்பதற்காகவே 2016ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்துமலை சுண்ணாம்புக் குகைகளில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த தாவரங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. இந்தச் சுண்ணாம்புக் குகைகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதால் இங்கு காணப்படும் சிறுரக விலங்குகளும் சற்று மாறுபட்டு உள்ளன. அதற்கு Liphistiidae ரக சிலந்திகளையும் அல்லது ரக வௌவால்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இங்குள்ள மாக்காவ் குரங்குகள் பத்துமலையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களிடையே மிகவும் புகழ் பெற்றவை. மனிதர்களுடம் இவை மிக நெருக்கமாகப் பழகுகின்றன. அந்த நெருக்கத்தில் சுற்றுப்பயணிகளை, குறிப்பாகச் சிறுவர்களை அக்குரங்குகள் சில சமயங்களில் கடித்து விடுவதும் உண்டு.

குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. அந்த இருண்ட குகையில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட நிலக்குடைவுகள் இருக்கின்றன. குகைகளின் உட்கூரையில் தொங்கும் ஊசிப்பாறைகளும் குகைத் தரையில் சுண்ணக்கல் புற்றுகளையும் ஆயிரக்கணக்கில் காண முடிகின்றது.

இந்த ஊசிப்பாறைகளும், சுண்ணக்கல் புற்றுகளும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் குகைத் திரைகள், குகை முத்துக்கள், இரட்டை வழிச் சோழிகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றன. பத்துமலைக் குகைகளின் சூழலியலைப் பாதுகாக்கும் பொருட்டு இருண்ட குகையின் உள்ளே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மலேசிய இயற்கை கழகம் அவ்வப்போது சிறப்பு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றது.

நற்பவி நற்பவி நற்பவி




#தத்தாத்ரேயர் 

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு

ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,

சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின்,
இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள்.
யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள்.
இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...'
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்..

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்.

- சித்தர்கள் தபோவனம்






கோவிலில் மறைந்து இருக்கும் உண்மைகள்




இந்தியாவில் லட்சக்கணக்கானகோவில்கள் உண்டு. ஆனால்அவையனைத்தும் வேத வழியில்கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லைஎன்றுதான் சொல்லவேண்டும். கோவில்கள் எங்கு பூமியின்காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோஅங்கு கட்டப்பட வேண்டும். அதுகிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோஎங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.பூமியின் வட தென் துருவ காந்த அலைஎங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படவேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமானகர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்தஅலை அதிகமாக இருக்கும். சரியாகச்சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில்சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின்அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில்தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கிபுதைக்கப்படும்.இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால்காந்த அலைகளை அது சுற்றிலும்பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்துகோவிலுக்கு சென்று சிலையைவலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின்காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல்அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும்.இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழிவகுக்கும். இது அறிவியல் பூர்வமானஉண்மை.
மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும்மூடப்பட்டுள்ளதால் ஆற்றலைஅதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும்விளக்கும் வெப்ப ஆற்றலைவெளிப்படுத்தும். மணியோசைபக்தர்களின் மனதினை அலைபாயவிடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இதுமன அழுத்தினைக் குறைக்கும்.
மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமானநல்ல ஆராவை (Aura – ஒருவரைச்சுற்றியுள்ள மனித காந்த சக்தி)வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளைகற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச்சேர்த்து கழுவி அந்த நீரைதீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிகஅதிகமான காந்தசக்தியுள்ளது.அத்தீர்த்தத்தினை தாமிரப்பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இதுபற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும்வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது.இதன் மூலம் நமது முன்னோர்கள் பலநோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்
மேலும் தீபாரதனை காட்டும் போது மிகஅதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான்ஆண்களை சட்டையில்லாமலும்பெண்களை அதிக அணிகலன்களோடும்கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்தகோயில்களையும்,அதில் தெய்வதிருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும்முறைகளை வகுத்து கொடுத்து கோயில்திசை நான்கிலும் விண்ணை முட்டும்பெரிய கோபுரங்களை நிர்மாணித்துஅவற்றின் சக்தியால் உயிர்கள் நல்லமுறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்திகொடுத்தார்கள்.கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம். ஆலயம்  தொழுவது சாலவும்நன்றே என்ற முன்னோர்களின் பொன்மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.ஆகம விதிப்படி கோயில்நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம்தவறாது  கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவழிபாடு நடந்து கொண்டிருக்கிறகோயில்களில் உள்ள கோபுரங்களின்  மேல்தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்டகலசங்கள் தனது கூரிய முனை வழியாகஆகாயத்தில்  உள்ள உயிர் சக்தி என்றுஅழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்துவெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல்பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு,உள்ளத் தூய்மை,  ஆன்மீக  ஈர்ப்பு,நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்திஅடைகிறோம்.இதனால் தான் கோபுர தரிசனம் கோடிபுண்ணியம் என்று முன்னோர்கள் கூறினர்.கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல்வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல்பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர்கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாதுஅனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்திபீடத்தின் அடியில் உள்ளதங்கத்தாலும்,வெள்ளியினாலும்செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள்,யந்திரங்கள் தன்பால் இழுத்து தான்அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்பபீடத்தின் மேல் தன் சக்தியைவெளிப்படுத்துகிறது.சில குறியீடுகளும், யந்திர தகடுகளும்,இந்த சக்தியை முழுவதும் ஈர்த்துவிடுகின்றன.இந்த பிராண சக்தியின் அளவை மேலைநாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டுபிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும்சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில்உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது.எனவே தான் பீடத்தின் மேல்அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைஅந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள்வழியாக வெளியேற செய்கிறது.அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில்வழியாக வெளியே வருகிறது. அங்குஇறைவனை வணங்கி கொண்டுள்ள நம்மீது படுகிறது. அப்போது தீப ஆராதனைகாட்டப்படும்போது , அந்த சக்திதூண்டப்பட்டு – கைகளை இணைத்து ,மேலே உயர்த்தி வணங்கும்போது – கைவிரல்கள் வழியே அந்த சக்தி நம்உடம்புக்குள் ஊடுருவுகிறது.இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீதுபரவி மனதில் உள்ள கவலைகள்,குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல்நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்குதிசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர்துவாரம்  அமைக்கப்பட்டுள்ளது.இந்ததுவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும்கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவதொட்டியில் விழும் நீரை கோயிலை வலம்வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன்எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக்கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம்மீதும் பிராணசக்தி பரவுகிறது.


இந்தபிராணசக்தி வெளிப்பட்டு கொண்டுஇருப்பதால் தான் சிலையின் குறுக்கேசெல்லக்கூடாது.சிலையின் பக்கவாட்டில் தான் செல்லவேண்டும். சிலையை விட்டு விலகிநிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போதுகைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது.ஒரு காலை வெளியிலும், மறு காலைகர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும்வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள்இரும்பாலான எந்த பொருளையும்பயன்படுத்த கூடாது என முன்னோர்கள்விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான்கூறியுள்ளனர்

மனிதனே இறைவன செயலிலால் இறைவன் ஆகிறான்


மனிதனே இறைவன

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் நம் முருக பெருமானை பற்றிய வித்தியாசமான ஆய்வு.
வாசித்து பாருங்கள் ...வியந்தே போவீர்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு.
’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது முருக பெருமானின் தத்துவம்.

சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக் கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி.

அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெரு வாழ்வு எய்திய மகான்கள்.

உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலுமே இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்".

தமிழ் கடவுள் முருகன் என்கிறாய். ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானமே போதாது.

இருப்பினும் அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும்.

மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்.பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்.சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு.

நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம்.

இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பிணைந்து உள்ளன. அந்த மையமே சுழு முனை என்பது ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.

இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மணிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும்.

இந்த சுழுமுனை புருவ முடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது. இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.

முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.

மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பிணைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.

இதைத்தான் கந்தகுரு கவசத்தில் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.

"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்".

எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம்.

குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்.

"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான் தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி எங்கும்  தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்".

சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று.இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என எண்ண வேண்டாம்.

ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்,வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.

ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரே.அவர் எவராலும் பெறப் படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.

முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான்.
உருவாக்கி கொண்டு இருக்கிறான்.
அதனாலே ஓசையான சத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு கடவுள் முருகன் என்றார் .

எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக் கொண்டு இருக்கிறது.அது சத்தம்.ஓசை. முருகன்.

அந்த சத்தம் எமது இதயத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது.உயிர் இருந்தால்தான் படைப்பு உருவாகும் .ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்.

எனவே ஆவணப் படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுளுடன் முடிந்து போகும். எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாவிடில் வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே நாம் உணர்வோம்.

எனவே ஆவணப் படுத்தும் எழுத்து வடிவத்தை பிள்ளையார் என்று அழைத்தனர் அகத்தியர் போன்ற மகான்கள். சிவன் அணுத் துகள் atom , என்பதை உணர்ந்த அகத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசக்தியான சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்கபட்டமையால் 'ஓசை' யை முருகன் என்றனர்.

நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குள் இருக்கு செவ்வேல் குறிக்கும். அதாவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சம நிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள்.

இதனாலேதான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிறார்கள்.சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பதுதான் செவ்வேல். இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை எனும் இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழாமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன் படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழச் சொல்லும் வீர வரலாறு.

விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான் என்ற உண்மையும், அது சாதாரண அற்ப மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.

ஞானம் பெறுதலின் ஒரு படி நிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோக நிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.

பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது.

தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும்.

பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக் கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.

ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது,

அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும்.

இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவனே நம் முருகப்பெருமான்தான்.

தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்திய பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திடச் செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் நாம் உணர்ந்து அறியலாம்.

மனிதனே இறைவன்.
செயலிலால் இறைவன் ஆகிறான்.


Wednesday, 1 March 2017

மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு.



நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..

இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட  நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.


முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.

அதைத்தான்  அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.

என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.


ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது.

அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.


மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி  நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.

இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர்.

மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.


கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று
டிக்கெட் செக்கர் சொன்னார்.

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.

ரயில் தன் பயணத்தை துவக்கியது.

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க
சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.


சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால்  நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்?இலவசம் வேன்டாம் நமது  பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்.

தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு வழிவகுப்போம்..!!