Sunday, 26 March 2017

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்


ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள்





ஸ்மார்ட் கார்டுகள் ஐந்து வகைகளில் இருக்கும். 
✓ கார்டில் புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

✓ 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும்.

✓ என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும்.
✓ 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை மட்டும்.




✓  'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.
✓ ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும்.
✓ அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என அச்சிடப்பட்டிருக்கும். 
✓ அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். 
✓ பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்., (QR) என்ற ரகசிய குறியீடு இருக்கும். 

✓ கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.
✓ ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.


Work pressure in IT Industry

Height of work pressure in IT Industry!!!!!

⚠ I was flashing my ID card instead of  unlocking the house door withkeys.

⚠Me and my friends went out for dinner in one of the best restaurants and as I finished I started walking towards the wash basin with Plates in my hand.

⚠I don't login to facebook, youtube, etc.. at my personal internet connection at home... thinking it will be blocked any way. Till I realize that I am at home.

⚠Once after talking to one of my friends I ended the conversation saying, "Ok bye... in case of any issues will call you back"

⚠Once I went to a pharmacy and asked for a tab. Pharmacist asked whether I want 250mg or 500mg? I replied 256mb. Thank god he didn't notice.

⚠After a hectic week, went to a movie. In the middle of the movie, when I wanted to check the time, I kept repeatedly glancing at the bottom right corner of the Theatre Screen.

😄So avoid working so hard !😄

Have a great work-life balance.

Lastly.....

😳😳😳😳😳😳😳😳



Extreme Work Pressure:
An employee opens his tiffin box on the road side to see, whether he is going to office, or coming back from office.

Nokia to launch its new smartphones


Nokia Launching 120 countries at the same time Q2 2017

HMD Global announced new Nokia branded smartphone at Mobile World Congress finally jumping onto the Android bandwagon. While the Nokia 6 is already selling in China, availability of the smartphone along with the Nokia 3 and 5 have not been revealed.
Now however, the company has revealed that it will launch the entire lineup of smartphones this year in the second quarter in about 120 markets at the same time. In a statement the company said “HMD has ambitious plans to release Nokia 3, 5 and 6 in 120 markets at same time in Q2 2017. This is ambitious because HMD is de facto a start-up, though it has support from Nokia and Foxconn.”



The Nokia 3 sports a 5-inch HD (1280×720 pixels) IPS display, a quad-core MediaTek MT6737 processor, 2 GB of RAM, 16 GB storage, 8 MP front and rear camera, and a 2650 mAh battery. It runs on Android 7.0 Nougat and will be available in dual SIM.
The Nokia 5 feature a Qualcomm Snapdragon 430 processor, 2GB of RAM, 16GB inbuilt storage, 5.2-inch IPS LCD (1280×720 pixels), 13 MP rear camera, an 8 MP camera, a fingerprint sensor and a 3000 mAh battery.
The Nokia 6 features a 5.5-inch full-HD display, a Snapdragon 430 SoC, 4 GB of RAM, 64 GB of internal storage, 3000 mAh battery, 16 MP rear camera, an 8 MP front camera with f/2.0 aperture and a fingerprint scanner.
As for the pricing, the Nokia 3 was announced at EUR 139 (Rs 9,800 approx), the Nokia 5 has been priced at EUR 189 (Rs 13,500 approx) and lastly the Nokia 6 is priced at EUR 229 (Rs 16,000 approx).
Nokia also announced the 3310 feature phone, as a nostalgia for its consumers. Hopefully the handset will launch at the same time which is priced at EUR 49 (Rs 3,500 approx).

பணமில்லா பரிமாற்றம்

வணக்கம் திரு. மோடி அவர்களுக்கு.

நாண் சராசரி மனிதன். என்னை போன்ற பலரின் கேள்வி இது தான். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்க்கு பதில் தாருங்கள்.இந்த நாட்டின் மீது எங்களுக்கும் அக்கரை இருக்கு.

 Cashless_Transaction! பணமில்லா பரிமாற்றம்!

உங்கள் பரபரப்பான அலுவல்களுக்கு இடையிலும் நீங்கள் FM radio கேட்பவராக இருந்தால் மேலே சொன்ன "இந்திய அரசுக்காக" என சொல்லப்படும் விளம்பர வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள். E-wallet எனப்படும் "மின்னணு பர்ஸ்" மூலம் உங்கள் transaction அமைவதால்... அரசாங்கத்துக்கு வரி வருவாய் கூடும் எனவும், இதற்காக "Mobile App"-களை டவுன்லோடு செய்யச் சொல்லியும், நம்மீது அறிவுஜீவி-களால் மூளைச்சலவை செய்யப்படுகிறது.

இதன் செயல்பாடு&சேவை எப்படி? பார்ப்போம்!

¶ SBI - மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 3% சேவைத் தொகை மற்றும் அதற்கான service tax..
¶ paytm மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் உறுப்பினர் அல்லாதோருக்கு 4% சேவைத் தொகையும் உறுப்பினர்களுக்கு 1% சேவைத் தொகையும்..
¶ Jio money மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 2.5% சேவைத் தொகை..
¶ ICICI, Axis, Mobikwik & Freecharge போன்றவை இன்னும் சேவைத் தொகை நிர்ணயம் செய்யவில்லை. (போதுமான மீன்கள் வலையில் விழுந்த பிறகு செய்வார்கள்)

இதனை யாராவது வெளிப்படையாக சொல்கிறார்களா? இதில் நமக்கென்ன பிரச்சினை? அதையும் பார்ப்போம்.

ஒரு நூறு ரூபாய் நோட்டு பல்வேறு காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கை மாறுகிறது என கொண்டால், அது எத்தனை ஆயிரம் பேர் கையை சென்றடைந்திருந்தாலும் அது ஒரு 100-ரூபாய்க்கான பரிமாற்றம். அவ்வளவே!
••• ••• •••
இப்போது இதனையே நாம் Reliance-ன் "Jiomoney" e-wallet மூலமாக மேற்கொள்வதாக எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நாம் 2.5% சேவைத்தொகை செலுத்த வேண்டும். அதாவது, 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூபாய் 2.50  சேவைத்தொகை ஆகும். இந்த நூறு ரூபாய் ஒரு ஆயிரம் பேரிடம் கைமாறியதாக எடுத்துக்கொண்டால், reliance-ற்கு (2.5x1000=2500) 2500 ரூபாய் கிடைக்கும். உட்கார்ந்த இடத்தில் வெறும் ஒரு நூறு ரூபாய்க்கே இவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்றால்...
"நோகாம நுங்கெடுக்கிறது" ஞாபகம் வருதா..?

யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? "மோடி" அவர்களின் திட்டம் யாருக்கு சாதகமானது? அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் விளக்குவார்களா?

நன்றி*

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்ற! சரி கட்டிட்டேன்.  மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குற. நகை வாங்க போறேன் அங்கேயும் வரி. சாப்பிட போறேன் அங்கேயும் வரி. மக்களை சாகடிச்சி புடுங்குற.  கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குற அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிற...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்ப?                    கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவே?!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்ப.

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்த?

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்று. எல்லா சிஸ்டத்தை மாற்று. சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து.                      இவண்....                                     இந்திய தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த        🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்தியர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳    *இதை அதிகம் பகிரவும்***

அத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமே..


இது PWD துறையில் உள்ள நண்பர் அனுப்பியது      👉🏼தயவு செய்து அனைவரும் படிக்கவும் பகிரவும்...

அத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமே....

கேரள அரசின் அட்டப்பாடி அணைக்கு நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்...
பாவனிஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் அணைக்கும் நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம்....

போராட்டம் தேவையில்லை

நீலகிரியில் உற்பத்தியாகும் முக்கிய ஊற்றுகள் அல்லது ஏரிகள்....

1.PYKARA LAKE
2.MUKUTRHY LAKE
3.PORTHYMUND LAKE
4.PARSANS VALLEY LAKE
5.SANDYNULLA LAKE
6.AVALANCHI LAKE
7.EMARALD LAKE
8.UPPER BHAVANI
9..KUNDHA DAM

இதில் PYKARA LAKE ல் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள் ஒன்றினைந்தே கர்நாடக மாநிலத்திற்குள் சென்று MOYAR RIVER என்ற பெயரில் ஒடுகின்றது பின்பு மீண்டும் தமிழக எல்லையில் பவானி சாகர் அணையை வந்தடைகிறது....

MUKUTRHY LAKE.PORTHYMUND LAKE.AVALANCHI LAKE இதிலிருந்து வெளியேரும் நீர் கேரள எல்லைக்குள் செல்கிறது.
UPPER BHAVANI இதிலிருந்து வெளிவரும் நீரே கேரள எல்லைக்குள் சென்று மீண்டும் அட்டபாடி வழியாக அத்திக்கடவை வந்தடைகிறது... சிறுவானி நீரும் UPPER BHAVANI நீரும் அட்டப்பாடி அருகே ஒன்றினைகின்றன. அட்ப்பாடியில் அணைகட்டுவதே கேரள அரசின் திட்டம்...

முதலில் நான் குறிப்பிட்ட 9 நீர் இருப்புகளில் UPPER BHAVANI ஐ தவிர மற்ற 8 நீர் இருப்புகளுக்கும் தொடர்பு உண்டு ஒன்றுக்கொன்று இணைந்தே காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றினைத்து KUNDHA DAM க்கு கொண்டு வர முடியும்....KUNDHA DAM ல் இருந்து ஏற்கனவே அத்திக்கடவிற்கு நீர் வரத்து உள்ளது.....

இவ்வாறு செய்வதன் மூலம் கேராளா மற்றும் கர்நாடகா செல்லும் நீரை தவிர்க்கலாம்.பைக்காரா நீர் கூடலூர் வழியாக செல்லவில்லை என்றால் பாவானி சாகர் அணைக்கு நீர்வரத்து எப்படி என்ற ஐயம் ஏற்படலாம் .... KUNDHA DAM வழியாக வரும் நீர் அத்திக்கடவு பில்லூர் டேம் வந்தைடைகிறது... இதிலிருந்து வெளிவரும் நீர் மேட்டுப்பாளையம் வழியாக பாவானி சாகர் அணையை வந்தடையும்.நீலகிரியில் உள்ள UPPER BHAVANI ஐத் தவிர மற்ற 8நீர் இருப்புகளையும் ஒன்றினைத்தாலே போதும் நீர் வழித் தடங்களை பெரிதாக்க வேண்டும்.... PYKARA DAM மற்றும் KUNDHA DAM ன் அளவை பெரிதாக்கி வழு சேர்க்க வேண்டும். சாத்தியமே..கேரளாவிற்கோ கார்நாடகாவிற்கோ செல்லும் நீரின் குறுக்கே நாம் அணைகட்ட தேவையில்லை..கடைசியாக நான் விட்டு வைத்தது UPPER BHAVANI இதிலிருந்தும் KUNDHA DAM நீர் கொண்டுவர முடியும் சற்று கடினமான ஒன்று பழைய வழித்தடங்கல் இல்லை... எதிலும் தொடர்பில்லாமல் தனித்தே உள்ளது . ஆனால் உருவாக்க முடியும் இந்த நீரை KUNDHA DAM உடன் இணைத்தால் கேரள அரசு அட்டப்பாடி அணைக்கு நீர் வரத்து குறையும் .பலஆண்டுகள் ஆகாது....  நாம் நினைத்தாள் ஒருசில ஆண்டுகளே. உண்மையில் சாத்தியமே.பகிருங்கள் நண்பர்களே...தமிழக தன்னாறுவ சேவை உள்ளங்கள். . அரசு அதிகாரிகள்  அனைவரும் சேர்ந்து நம் அரசுக்கு எடுத்துக் கூறுவேம் தமிழ் நாட்டை காக்க தமிழர்களாகியநாம்👈🏻தயவு செய்து நண்பர்களுக்கு அனுப்பவும்👨‍👨‍👧‍👧

படித்ததில் பிடித்தது



பிச்சைகாரன்: சார்…


எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம்  தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின்  அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.



நெஞ்சை உருக்கிய நிகழ்வு.


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்  தேடி அமர்ந்தேன்..

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி ...

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு..

மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்..

ஏன்...சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவாக இருக்கும்

ஆமாம்..உண்மை.

இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது...உடனே
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..

அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்...நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளை பிடித்து குலுக்கி,  இது  ஒரு மிகப்பெரிய கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்...

இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..தன்னடைய  உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள்
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடுவதுடன் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன்.அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றர்கள்..என்பது
மிகுந்த வேதனை...

கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
 ஓட்டு போட்ட மக்களை  ஏமாற்றும் அரசியல்வாதிகள்...மற்றும் லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை  நினைத்துக்கூட  பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது....

எம் தேசத்து என் இளைஞனே..என் சகோதரனே...
நம் தேச நலன் காக்க
வெளியே வா.....

ஜெய் ஹிந்த் *