Sunday 26 March 2017

பணமில்லா பரிமாற்றம்

வணக்கம் திரு. மோடி அவர்களுக்கு.

நாண் சராசரி மனிதன். என்னை போன்ற பலரின் கேள்வி இது தான். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்க்கு பதில் தாருங்கள்.இந்த நாட்டின் மீது எங்களுக்கும் அக்கரை இருக்கு.

 Cashless_Transaction! பணமில்லா பரிமாற்றம்!

உங்கள் பரபரப்பான அலுவல்களுக்கு இடையிலும் நீங்கள் FM radio கேட்பவராக இருந்தால் மேலே சொன்ன "இந்திய அரசுக்காக" என சொல்லப்படும் விளம்பர வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள். E-wallet எனப்படும் "மின்னணு பர்ஸ்" மூலம் உங்கள் transaction அமைவதால்... அரசாங்கத்துக்கு வரி வருவாய் கூடும் எனவும், இதற்காக "Mobile App"-களை டவுன்லோடு செய்யச் சொல்லியும், நம்மீது அறிவுஜீவி-களால் மூளைச்சலவை செய்யப்படுகிறது.

இதன் செயல்பாடு&சேவை எப்படி? பார்ப்போம்!

¶ SBI - மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 3% சேவைத் தொகை மற்றும் அதற்கான service tax..
¶ paytm மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் உறுப்பினர் அல்லாதோருக்கு 4% சேவைத் தொகையும் உறுப்பினர்களுக்கு 1% சேவைத் தொகையும்..
¶ Jio money மூலமாக செய்யப்படும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் 2.5% சேவைத் தொகை..
¶ ICICI, Axis, Mobikwik & Freecharge போன்றவை இன்னும் சேவைத் தொகை நிர்ணயம் செய்யவில்லை. (போதுமான மீன்கள் வலையில் விழுந்த பிறகு செய்வார்கள்)

இதனை யாராவது வெளிப்படையாக சொல்கிறார்களா? இதில் நமக்கென்ன பிரச்சினை? அதையும் பார்ப்போம்.

ஒரு நூறு ரூபாய் நோட்டு பல்வேறு காரணங்களுக்காக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கை மாறுகிறது என கொண்டால், அது எத்தனை ஆயிரம் பேர் கையை சென்றடைந்திருந்தாலும் அது ஒரு 100-ரூபாய்க்கான பரிமாற்றம். அவ்வளவே!
••• ••• •••
இப்போது இதனையே நாம் Reliance-ன் "Jiomoney" e-wallet மூலமாக மேற்கொள்வதாக எடுத்துக் கொள்வோம். இதன் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நாம் 2.5% சேவைத்தொகை செலுத்த வேண்டும். அதாவது, 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூபாய் 2.50  சேவைத்தொகை ஆகும். இந்த நூறு ரூபாய் ஒரு ஆயிரம் பேரிடம் கைமாறியதாக எடுத்துக்கொண்டால், reliance-ற்கு (2.5x1000=2500) 2500 ரூபாய் கிடைக்கும். உட்கார்ந்த இடத்தில் வெறும் ஒரு நூறு ரூபாய்க்கே இவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்றால்...
"நோகாம நுங்கெடுக்கிறது" ஞாபகம் வருதா..?

யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? "மோடி" அவர்களின் திட்டம் யாருக்கு சாதகமானது? அவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் விளக்குவார்களா?

நன்றி*

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்ற! சரி கட்டிட்டேன்.  மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குற. நகை வாங்க போறேன் அங்கேயும் வரி. சாப்பிட போறேன் அங்கேயும் வரி. மக்களை சாகடிச்சி புடுங்குற.  கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குற அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிற...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்ப?                    கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவே?!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்ப.

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்த?

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்று. எல்லா சிஸ்டத்தை மாற்று. சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

வரியை ஒழுங்காக நடைமுறை படுத்து.                      இவண்....                                     இந்திய தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த        🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்தியர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳    *இதை அதிகம் பகிரவும்***

No comments:

Post a Comment