பீட்டா இந்தியா என்ஜிஓ வாக பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் . எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத பீட்டாவிற்கு கடந்த ஆண்டு கிடைத்த நன்கொடை 320 கோடி . ஜல்லிக்கட்டு வழக்கிற்கு மட்டும் 2.5 கோடி பீஸ் கொடுத்து இருக்கிறது .! காரணம் பல்வேறு பரகாசுர நிறுவனங்களுக்கு இடது புரோக்கர் வேலை பார்க்கிறது . பீட்டாவால் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சில சக்திகள் ..
1. ஜெர்ஸி பண்ணைகள் , இங்கிலாந்து, டென்மார்க் , சுவிஸர்லாண்ட்
2. கேஎப்சி சிக்கன் ( பல்வேறு நாடுகளில் நாட்டுக் கோழிகளை ஒழித்தது )
3. கென்னல் கிளப் ( நாட்டு நாய்களான ராஜபாளையம் , கொம்பை உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாட்டு நாய்களை ஒழித்தது )
4. பெடிகிரி ( இந்த அமெரிக்க நிறுவனம் நாட்டு நாய்களை ஒழித்து உலகெங்கும் பல்லாயிரம் கோடிக்கு நாய் உணவுகள் விற்பனை செய்கிறது )
5. அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் ( மும்பையை சேர்ந்த சதீஷ் , அதுல் என்பவர்களின் இந்த நிறுவனம் தான் உலக அளவில் அதிகம் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனம் )
6.ஹட்சன் அக்ரோ புட்ஸ் ( தமிழகத்தில் நாட்டு மாடுகள் குறைந்து , ஜெர்ஸிகள் பெருக முக்கிய காரணம் )
7. சுகுணா பிராய்லர்ஸ் ( இந்தியாவில் நாட்டுக்கு கோழிகள் அழிந்து வருவதற்கு முக்கிய காரணம் )
8. கொக்கோ கோலா ( இப்போது பாலிலும் நுழைந்துள்ள கோக் நிறுவனம் VIO என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட பாலை இந்தியாவில் விற்பனை செய்ய துவங்கி உள்ளது . அடுத்த சில ஆண்டுகளில் இந்திய பால் சந்தையை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது .)
9. அமெரிக்கன் ஜெர்சி கேட்டில் அசோசியேசன் ( உலக அளவில் காளை உயிரணு விற்பனையில் 50 சதவீதத்தை கொண்டுள்ள இந்த அமைப்பு , நாட்டு காளைகளை ஒழித்து கட்டியதில் முக்கிய பங்கு வகிக்கிறது )
10. பீட்டாவின் நேரடி வேலை - அமெரிக்கா உள்ளிட்ட பீட்டா உள்ள நாடுகளில் தெருக்களில் உள்ள நாய் , பூனை உள்ளிட்ட விலங்குகளை பிடித்து செல்லும் பீட்டா , 15 நாட்களுக்குள் அதற்கு யாரும் உரிமை கோராவிட்டால் கருணைக் கொலை செய்துவிடும். இதுவரை பீட்டாவால் ஒரு கோடி விலங்குகள் கொல்லப் பட்டுள்ளன.
இவை வெறும் உதாரணங்கள் மட்டுமே . இதுமாதிரி பீட்டாவுக்கு ஆயிரம் கரங்கள் உள்ளன. அவற்றின் பணபலம் மூலம் அரசியல்வாதிகளையும் , நீதி துறையையையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment