அமைதியான போராட்டத்தை ஒடுக்கிய காவல்துறை என்று கூவுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல...
அன்று காலை 6:00 மணி முதல் ஒலிபெருக்கியில் முதலமைச்சர் கொடுத்த உறுதியும் அவசர சட்டம் பற்றியும் போராட்டம் வெற்றி பெற்றது என்ற அறிவிப்பையும் காவல்துறை செய்தது.
இதை அனைத்து தொலைகாட்சிகளும் ஒளிபரப்பியதால் பெரிய ஆதாரம் தேவையிருக்காது.
சுமார் 8:00 மணியளவில் மெரினா கிட்டதட்ட காலியானது. சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை இழுத்து வெளியேற்றினார்கள் என்பதும் உண்மைதான் ஆனால் இழுத்தார்களே அன்றி வரம்பு மீறி அடிக்கவில்லை சொல்ல போனால் கையில் அப்பொழுது லத்தி கூட இல்லை...
9:00 அளவில் ஒரு சிறு குழுவினர் கடலை நோக்கி நகர்ந்து அங்கேயே நின்று போராட ஆரம்பித்துவிட்டனர். அவர்களை காவல்துறை நெருங்க கூட இல்லை. சற்று தள்ளி நின்றே மீண்டும் பாதுகாப்பு பணியில் இறங்கினார்கள். இந்த குழுவினருடந்தான் சிலர் பிறகு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
திருவல்லிகேனியில் இருந்து கடற்கரையை இணைக்கும் சாலை சீல் வைக்கப்பட்டிருந்தது. அவசியமான சிலவற்றை தவிற மற்றவை அனுமதி மறுப்பு என்று காவல்துறை அறிவித்தது இது 10 மணியிருக்கும். ஆனால் அத்து மீறி ஒரு கும்பல் நுழைய ஆரம்பிக்க பிரச்சனை ஆரம்பமானது.
மெரினாவில் போராட்டத்தில் பிடிவாதம் பிடித்தவர்கள் அங்கேயே அதே காவல்துறை பாதுகாப்போடுதான் இருந்தார்கள். ஆனால் கலவரகாரர்கள் திருவல்லிகேனி காவல்நிலையத்தில் பெண் காவலர்கள் உள்ளே இருக்கும் பொழுதே பூட்டி நெருப்பை வைத்துவிட பிறகே காவல்துறை களத்தில் லத்தியை சுழற்றியது.
டுமீல் போராளிகள் ஹிந்தியிலும் உருதுவிலும் கட்டளைகள் இட்டப்படி கல்வீசும் சம்பவங்கள் வீடியோவும் வெளி வந்திருக்கிறது. ஆம்பூரை போல பெண் காவலரை மானபங்கப்படுத்தினால் கூட அமைதி பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? காவல்துறை ஒன்றும் அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் துறையல்ல.
#ISUPPORTTNPOLICE
No comments:
Post a Comment