Wednesday, 25 January 2017

Measles Rubella Antibiotic Medicine



Measles Rubella 

6 -2- 2017 முதல் 28-2-2017வரை  9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் மீசல்ஸ் - ருபெல்லா

( Measles Rubella) தடுப்பூசி  போடப்படஉள்ளது.


தட்டம்மை ()

வைரசால் உண்டாகும் தட்டம்மை மிகவும் பரவக் கூடியது ஆகும். இது மணல்வாரி என்றும் அழைக்கப்படும். பாதுகாப்பான, பலனளிக்கக்கூடிய தடுப்பு மருந்து இருந்தும்,
குழந்தைச் சாவுக்கு இது ஒரு முக்கியக் காரணமாக விளங்குகிறது.
இது வைரசால்
( பாரோமைக்சோ வைரஸ்) உண்டாகும் ஒரு மூச்சு மண்டலத் தொற்று நோயாகும். நோயுள்ள ஒருவரின் மூக்கு, வாய், தொண்டைச் சளியின் மூலமாக இது பரவுகிறது.


ரூபல்லா

இது ஜெர்மானிய மணல்வாரி அம்மை எனப்படுகிறது.
இது காற்றில் பரவும் தன்மை கொண்ட தொற்று நோய்க் கிருமி. நோய்த் தொற்றுள்ள குழந்தை பிற குழந்தைகளோடு நெருங்கி விளையாடும்போது, சுலபமாக அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்றுவிடும்.
 நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தையாக இருந்தால் உடனடியாக வைரஸ் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிடும்! பாதிக்கப்பட்ட குழந்தையின் சளியில்கூட ருபெல்லா வைரஸ் இருக்கும். குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களைக் கூட இது தாக்கும். ஆனால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. கருவுற்ற பெண்களை 'ரூபெல்லா’ தாக்கும் போது அது கருவை பெரிய அளவில் பாதிப்படையச் செய்கிறது!'


இந்த இரு நோய்களையும் தடுப்பதற்காக மீசல்ஸ் - ருபெல்லா
( Measles Rubella) தடுப்பூசி  போடப்படஉள்ளது.

 இதை தவறாமல் அனைவரும்  பயன்படுத்தி கொள்ளவும்.

இதற்கு முன்பு இந்த வகை ஊசி போட்டுஇருந்தாலும் MR தடுப்பூசியை போடும்படி கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

  இந்த செய்தியை முடிந்த வரை அனைவருக்கும் பொதுநலன் கருதி பகிரவும்.


No comments:

Post a Comment