Friday 10 March 2017

சேலத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்



சேலத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது ☺😊

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று காலை முதல் செயல்பட தொடங்கியது.

இது குறித்து கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு. சசிக்குமார் அவர்கள் கூறியதாவது:-

சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் அரசு வேலை நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 9-30 மணி முதல் மாலை 4-30 மணி வரை இந்த பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும்.
இந்த மையத்தில் புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கை ரேகை பதிவு , கரு விழி பதிவு செய்யப்படும். புகைப்படமும் எடுக்கப்படும். பின்னர் போலீஸ் விசாரணைக்குப் பிறகு பாஸ்போர்ட் வீடு தேடி தபாலில் வரும்.



புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போர் ஆன்லைனில் ஜீணீssஜீஷீக்ஷீtவீஸீபீவீணீ.ரீஷீஸ் .வீஸீ என்ற இணைய தளத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் சேலம் அலுவலகத்திற்கு நேரில் வருவதற்கான தேதியையும், நேரத்தையும் பதிவு செய்ய வேண்டும், இன்று ஆன்லைனில் பதிவு செய்தால் நாளை சேலத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வந்து கை ரேகை மற்றும் கரு விழி பதிவு செய்யலாம். புகைப்படம் எடுக்கப்படும். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்படும்.

ஒரு நாளைக்கு 100 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அலுவலகத்தில் சரிபார்ப்பு பணி முடிந்ததும் போலீஸ் விசாரணைக்கு அவர்களது விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். போலீஸ் விசாரணை முடிந்த பிறகு பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.



தற்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
*இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்..


நன்றி..
---------
சேலம் மாவட்டம் சார்ந்த பல தகவல்களை பெற எமது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்கள்.



No comments:

Post a Comment